bootstrap templates
We are a progressive, fast growing and forward looking corporate body consisting of a group of generally young, dedicated, socially very conscious lawyers, fully inclined on ethical practice, with wide contacts in all the spheres of life, providing comprehensive integrated solutions across the entire legal services spectrum in the most cost effective and time effective manner, serving a wide range of national and international clientele with an all India foot print.

Legal - சட்டம்

நீங்கள் ஏதேனும் சூழ்நிலையில் கைது செய்யப்பட்டால் அந்த சமயம் உங்கள் உரிமை என்ன..?
கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்.
1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும்.
2. கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும்.
3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
4. கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.
5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும்
6. காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்டவிபரம் மற்றும் எந்த அதிகாரியின் பொறுப்பில் இருக்கிறார் என்ற விபரங்களை பதிவேட்டில் குறிக்க வேண்டும்…
7. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்துச் சோதனைக் குறிப்பு தயார் செய்ய வேண்டும்.
8. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.
9. கைது செய்யப்பட்ட ஆவணங்களைக் குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.
10. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும்போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.
11. கைது பற்றிய தகவல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.  
உணவு விடுதிகள் சட்டம்:
தமிழ்நாடு உணவு விடுதிகள் சட்டம்-1958 உணவு விடுதிகள் பதிவு
இச்சட்டத்தின் பிரிவு - 3ன் படி ஒவ்வொரு உணவு விடுதியும் பதிவு செய்யப்பட வேண்டும். இச்சட்டத்தின் பிரிவு 4ன் படி உணவு விடுதியைப் பதிவு செய்வதற்கான நடைமுறைகள் சொல்லப்பட்டுள்ளன.இதன்படி உணவு விடுதியின் உரிமையாளர், இச்சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆய்வாளரிடம், உணவு விடுதியைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அவர் தகுந்த ஆய்வு மேற்கொண்டு அதில் திருப்தியடைந்தால் பதிவுச்சான்றிதழ் வழங்கி ஆணையிடுவார். இந்த விண்ணப்பம் விடுதி தொடங்கப்பட்ட 30 நாட்களுக்குள் கொடுக்கப்பட வேண்டும். இந்த விண்ணப்பம் கொடுக்கப்பட்டு 3 மாதங்களுக்குள் மாறான ஆணை எதுவும் அளிக்கப்படாத நிலையில் அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதாகக் கருதப்படும். இந்தப் பதிவுச் சான்றிதழ் ஒரு வருட காலத்திற்கு மட்டும் செல்லுபடியாகக் கூடியது. இச்சான்றிதழ் வருடம் தோறும் புதுப்பிக்கப்பட வேண்டும். புதுப்பித்தலுக்கும் பதிவு செய்வதற்கான நடைமுறைகள்தான் பின்பற்றப்படும்.
உணவு விடுதிகள்
தமிழ்நாடு உணவு விடுதிகள் சட்டம்-1958 வேலை நேரம் குறித்த விதிகள்
தொழிலாளர்களை ஒரு நாளில் 9 மணி நேரத்திற்கு அதிகமாகாமலும், ஒருவாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு அதிகமாகாமலும் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்.
மிகுதிநேர வேலை செய்ய வேண்டியது இருந்தால் மொத்த வேலை நேரம் ஒரு நாளில் 10 மணி நேரத்தையும், மொத்த மிகுதி நேர வேலை நேரம் அடுத்தடுத்த மூன்று மாதத்தில் 54 மணி நேரத்தையும் தாண்டக் கூடாது.
வேலை நேரத்திற்கு அதிகமாக வேலை பார்த்த தொழிலாளிக்கு அவருடைய சாதாரண சம்பளத்தில் இரண்டு மடங்கு சம்பளம் மிகுதி நேரக் கூலியாக அளிக்கப்பட வேண்டும்.
தொழிலாளி தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது. அவருக்குக் குறைந்தது 30 நிமிடம் ஓய்வு வழங்கப்பட வேண்டும்
ஒரு உணவு விடுதியின் மொத்த வேலை நேரம், ஓய்வு நேரத்தையும் சேர்த்து 14 மணி நேரத்தைத் தாண்டக் கூடாது.
உணவு விடுதிகள்
தமிழ்நாடு உணவு விடுதிகள் சட்டம்-1958 பிரிவு - 2(1)ன் படி, பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவகம் அல்லது தங்கும் வசதியுடன் உணவு வழங்கும் தொழில் இடங்கள் போன்றவை உணவு விடுதிகள் எனப்படும். சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி பதிவு பெற்ற சங்கங்களால் நடத்தப்படும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் போன்றவையும் உணவு விடுதிகள் எனப்படும். ஆனால் கல்வி நிறுவனங்கள் நடத்தும் உணவகங்கள் இச்சட்டத்தின் கீழ் உணவு விடுதி அல்ல. தமிழ்நாட்டில் உள்ள உணவு விடுதிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வேலை நிலைகளை ஒழுங்குபடுத்துவதற்காக தமிழ்நாடு உணவு விடுதிகள் சட்டம்-1958 Tamilnadu Catering Establishments Act -1958 கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களுக்கு மட்டும் பொருந்துவதாகக் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் பொருந்தக் கூடிய உணவு விடுதிகளுக்கு, வாரவிடுமுறை நாட்கள் சட்டம் - 1942, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் - 1947 மற்றும் தொழிற்சாலைகள் சட்டம் - 1948 ஆகியவை பொருந்தாது.
தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கான சிறப்பு உரிமைகள்.. 
தொழிற்சாலைகள், தொழிற்கூடங்களில் பெண் தொழிலாளருக்கு தனி குளியல் அறைகள், கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அவை பூட்டுகள் உள்ள அறைகளாக இருக்க வேண்டும்.

முப்பதுக்கும் மேற்பட்ட மகளிர் பணியாற்றும் தொழிற்சாலைகளில் குழந்தைகள் காப்பகம் இருக்க வேண்டும். காலை ஆறு மணி முதல் மாலை ஏழு மணிவரை தான் வேலை நேரமாக இருக்க வேண்டும்.

மகளிரை ஓடிக்கொண்டிருக்கும் எந்திரத்தை சுத்தப்படுத்தும்படி, எண்ணையைத் துடைக்கும்படி கூறக்கூடாது.

மகளிர் ஒரு வாரத்தில் 48 மணிநேரத்திற்கு மேல் பணியாற்றும்படி கட்டாயப்படுத்தக் கூடாது.

ஒரே நேரத்தில் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றும்படி கட்டாயப்படுத்த முடியாது.

பூமிக்கடியில் நடைபெறும் எந்தப் பணியிலும் மகளிரை நியமிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

வீட்டு வன்முறையின் குற்றமிழைப்பவர்கள் பின்வருவோராக விளங்கலாம்:
ஒரு வாழ்க்கைத்துணை
ஒரு முன்னாள் வாழ்க்கைத்துணை
ஓர் இணைவாழ்விலான துணைவர்
ஒரு பெற்றோர்
வாழ்க்கைத்துணை அல்லது முன்னாள் வாழ்க்கைத்துணை அல்லது இணை வாழ்விலான துணைவர்
தந்தை, தாய், தாத்தா, பாட்டி, சித்தப்பா (step-father) அல்லது சித்தி (step-mother)
மகன், மகள், பேரன், அல்லது பேத்தி, பெறாமகன் (step-son) பெறாமகள் (step-daughter)
சகோதரன், சகோதரி, ஒன்றுவிட்ட சகோதரன், ஒன்றுவிட்ட சகோதரி, உடன்பிறவா சகோதரன் (step-brother) உடன்பிறவா சகோதரி (step-sister)
பெற்றோரின் சகோதரன் அல்லது சகோதரி
சகோதரரின் அல்லது சகோதரியின் பிள்ளை
பெற்றோரின் சகோதரரின் அல்லது சகோதரியின் பிள்ளை
மருமகன் (son in law) அல்லது மருமகள் (daughter in law) துஷ்பிரயோகத்தை இழைப்பவர்களாக இருக்கலாம் என்ற போதிலும், அவர்கள் சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என்பதே சட்டத்தில் உள்ள ஓர் ஓட்டையாகும். எனினும், குற்றவியல் சட்டக்கோவையில் உள்ள ஏற்பாடுகளுக்கு ஏற்ப அத்தகைய நபர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட நபர் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.  
பெண்களுக்கான சொத்துரிமை!
பெற்றோர்கள் வழிவரும் பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரி மை உள்ளது. ஒருவேளை பெண் வாரிசுகள் தங்களுக்கு சொத்தி ல் பங்கு தேவையில்லை என்கிறபட்சத்தில், அதை இதர வாரிசுகள் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், திரு மணமான பெண்களுக்கான சொத்துஉரிமையி ல் சில கட்டுப்பாடுகள் உள்ளன.

2005-ம்ஆண்டு சட்டதிருத்தத்தி ன்படி, பெண்கள் தனது தந்தை ன் காலத்திற்குப் பிறகு அவரது பூர்வீகச் சொத்தில் உரிமை கோ ரமுடியும். மேலும், 25.3.1989-க் குமுன்பு திருமணம்செய்து கொ ண்ட ஓர் இந்துப் பெண் பூர்வீகச் சொத்தில் உரிமை கோர முடியாது. ஆனால், அதற்குபிறகு திரு மணம் செய்துகொ ண்ட பெண் தனது தந்தையின் பூர்வீகச் சொத் தில் உரிமை கோர முடியும். அதேவேளையில், சொத்து 25.3.89-க்கு முன்னர் பாகப் பிரிவினை செய்யப்பட்டிருந்தால், பாகப்பி ரிவினை கோர முடியாது. ஒரு வேளை அந்த சொத்து விற்கப் படாமல் அல்லது பாகம் பிரிக் கப்படாமல் இருந் தால் உரிமை கோர முடியும்.
தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கான சிறப்பு உரிமைகள
தொழிற்சாலைகள், தொழிற்கூடங்களில் பெண் தொழிலாளருக்கு தனி குளியல் அறைகள், கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அவை பூட்டுகள் உள்ள அறைகளாக இருக்க வேண்டும்.

முப்பதுக்கும் மேற்பட்ட மகளிர் பணியாற்றும் தொழிற்சாலைகளில் குழந்தைகள் காப்பகம் இருக்க வேண்டும். காலை ஆறு மணி முதல் மாலை ஏழு மணிவரை தான் வேலை நேரமாக இருக்க வேண்டும்.

மகளிரை ஓடிக்கொண்டிருக்கும் எந்திரத்தை சுத்தப்படுத்தும்படி, எண்ணையைத் துடைக்கும்படி கூறக்கூடாது.

மகளிர் ஒரு வாரத்தில் 48 மணிநேரத்திற்கு மேல் பணியாற்றும்படி கட்டாயப்படுத்தக் கூடாது.

ஒரே நேரத்தில் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றும்படி கட்டாயப்படுத்த முடியாது.

பூமிக்கடியில் நடைபெறும் எந்தப் பணியிலும் மகளிரை நியமிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

வீட்டு வன்முறையின் குற்றமிழைப்பவர்கள் பின்வருவோராக விளங்கலாம்:
ஒரு வாழ்க்கைத்துணை
ஒரு முன்னாள் வாழ்க்கைத்துணை
ஓர் இணைவாழ்விலான துணைவர்
ஒரு பெற்றோர்
வாழ்க்கைத்துணை அல்லது முன்னாள் வாழ்க்கைத்துணை அல்லது இணை வாழ்விலான துணைவர்
தந்தை, தாய், தாத்தா, பாட்டி, சித்தப்பா (step-father) அல்லது சித்தி (step-mother)
மகன், மகள், பேரன், அல்லது பேத்தி, பெறாமகன் (step-son) பெறாமகள் (step-daughter)
சகோதரன், சகோதரி, ஒன்றுவிட்ட சகோதரன், ஒன்றுவிட்ட சகோதரி, உடன்பிறவா சகோதரன் (step-brother) உடன்பிறவா சகோதரி (step-sister)
பெற்றோரின் சகோதரன் அல்லது சகோதரி
சகோதரரின் அல்லது சகோதரியின் பிள்ளை
பெற்றோரின் சகோதரரின் அல்லது சகோதரியின் பிள்ளை
மருமகன் (son in law) அல்லது மருமகள் (daughter in law) துஷ்பிரயோகத்தை இழைப்பவர்களாக இருக்கலாம் என்ற போதிலும், அவர்கள் சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என்பதே சட்டத்தில் உள்ள ஓர் ஓட்டையாகும். எனினும், குற்றவியல் சட்டக்கோவையில் உள்ள ஏற்பாடுகளுக்கு ஏற்ப அத்தகைய நபர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட நபர் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.
 

Legal - சட்டம் -1

பெண்களைக் கைது செய்யும்போது காவல்துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:
1. கைது செய்யப்பட்ட பெண்களை, ஆண் குற்றவாளிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு, தனி லாக்-அப்பில் அடைக்கப்பட வேண்டும். தனியாக லாக்-அப் இல்லாவிட்டால், பெண்களை தனி அறை களில் அடைக்க வேண்டும். மேலும், பெண்கள் கைது செய்யப்படும்போது, பெண் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. பெண்களை, சூரிய அஸ்தமனம் - சூரிய உதயம் இடையே அதாவது இருட்டியபிறகு, கைது செய்யக்கூடாது. ஆண் காவலர்களால் பெண்கள், பாலியல் தொல்லைகளுக்கு காவல் நிலையத்திலேயே ஆளாக்கப்பட்டதால், இந்த விதி உருவாக்கப்பட்டது.
3. மூன்றாவதாக, பெண்களை, சிறுமிகளை காவல் நிலையத்திற்கோ, வேறு இடங்களுக்கோ விசாரணை செய்ய அழைக்கக்கூடாது. அவர்கள் வசித்துவரும் வீட்டில் தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணை செய்யவேண்டிய நேரமும், முறையும் பெண்களுக்கு கூச்சத்தை, அவமானத்தை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.
4. பெண் கைதிகளுக்கு, அல்லது வேறு பெண்களுக்கு மருத்துவ சோதணை செய்ய பெண் மருத்துவர்களையே அனுமதிக்க வேண்டும். பெண் அதிகாரிகள் மேற்பார்வை யில் இந்த மருத்துவ பரிசோதணை கையாளப்பட வேண்டும். பெண் கைதிகள் குழந்தை பெற்றால், Prenatal and Postnatal Care பராமரிப்பு அளிக்க வேண்டும்.
5. பெண்கள் பேறுகாலத்தில் இருந்தால், அவர்களை கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமல்ல, கருவில் இருக்கும் சிசுவும் சேதமுற வாய்ப்புக்கள் இருப்பதால், இந்த முடிவை முடிந்த அளவிற்குத் தவிர்க்க வேண்டும். மேலும், கருத்தரித்தப் பெண்களை கட்டுப்படுத்தக்கூடாது. ஓரளவு சுதந்திரம் அளிக்க வேண்டும். பெண்களையும், சிறுமிகளையும் பெண் காவலர்கள் அல்லது பெண் அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும். பெண் காவல் அதிகாரிகள் முன்னிலையிலேயே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது.
1. வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றாமாகும். இக்குற்றத்திற்கு,ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.

2. வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ. 10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.

3. வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.

4. ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.

சச்சரவு (Affray)
பொதுப் பாதை, சந்தை பொதுப் பூங்கா போன்ற பொது இடங்களில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதுண்டு 'சண்டை' என்றால் ஒருவரையொருவர் வாய் வார்த்தையால் திட்டிக் கொள்ளலாம் அல்லது அடித்துக் கொள்ளவும் சொய்யலாம்.
அதாவது இருவருக்குள் வாய்ச் சண்டை முற்றி ஒருவர் மற்றொருவரை அடிப்பதற்குக் கையை ஒங்குவதும் அந்த மற்றொருவரும் திருப்பி அடிக்கப் போவதுமாகக் கூறித் தம் கையை ஒங்குவதும் நடந்தாலே அது சண்டை தான் அதுபோல் வாய்ச்சண்டை முற்றி ஒருவர் மற்றொருவரை அடித்து விடுவதும் சண்டைதான்.
இச்செயல், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுன் அமைதியைக் குலைப்பதேயாகும்.
அவர்கள் மனதில் அச்சத்தை உண்டு செய்வதாகும் இதைத்தான் இந்திய தண்டனைச் சட்டமானது தனது 159 -வது பிரிவின் வாயிலாக 'சச்சரவு'........சுமுகமாக தீர்க்கப்படும்.

திருமணச் பதிவு சட்டம்:
முன்பு திருமணங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசிமில்லை. அப்போது மூன்று வகையான திருமண பதிவுச் சட்டங்கள் இருந்தன.
இந்து திருமணச்சட்டம்
தனி திருமணச் சட்டம்
கிரிஸ்தவ திருமணச் சட்டம்.
இந்த மூன்று வகையான சட்டங்களில் ஒன்றில் திருமணங்களை பதிவு செய்யும் நடைமுறையே 2009க்கு முன்பு வரை இருந்தது.
2009க்கு பிறகு, இந்த மூன்று வகை திருமண சட்டங்களில் ஏதேனும் ஒன்றில் திருமணத்தை பதிவு செய்தாலும் மீண்டும் தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் – 2009-ன்படி கட்டாயம் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். ஆதலால் மேற் சொன்ன மூன்று வகையான திருமண பதிவுச்சட்டங்களில் பதிவு செய்வது அவசியம் இல்லாமல் போகிறது. எனவே தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் – 2009-ன் படி மட்டுமே திருமணங்களை பதிவு செய்தால் போதும் இத்திருமணங்களை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதை இந்த மாதம் பார்ப்போம்.
தமிழ் நாடு திருமணச் சட்டம் – 2009ன் படி திருமணம் நடந்த 90 தினங்களுக்குள் திருமணத்தை பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று பதிவுச செய்யவேண்டும்.
திருமணம் முடிந்து 90 நாட்களுக்குள் பதிவு செய்தால் கட்டணம் ரூ.100/- மட்டுமே.
திருமணம் முடிந்து 91 முதல் 150 நாட்களுக்குள் பதிவு செய்தால் அபராத கட்டணம் ரூ.50/-ம் சேர்த்து மொத்தம் ரூ.150/- செலுத்தவேண்டும்.
திருமணம் முடிந்து 150 நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு திருமணச் சட்டம்-2009-ன்படி பதிவு செய்ய முடியாது.
150 நாட்களுக்கு பிறகும் பதிவு செய்யாதவர்கள் மீது அந்த பகுதி பதிவாளர் குற்ற நடவடடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சட்ட விதி முறை வகுக்கப்பட்டுள்ளது. எனவே இனி திருமணம் செய்து கொள்ளும் அனைவரும் 90 நாட்களுக்குள் இச்சட்டப்படி திருமணத்தை பதிவு செய்து கொள்ளுங்கள்.
திருமணம் எங்கு நடந்ததோ அந்த பகுதிக்கான பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே இச்சட்டப்படி திருமணத்தை பதிவு செய்ய முடியும். (மூன்று வகையான திருமணச் சட்டத்தில் திருமணம் நடந்த பகுதி பதிவாளர் அலுவலகம் அல்லது பெண் வீடு உள்ள பகுதி பதிவாளர் அலுவலகம் அல்லது மாப்பிள்ளை வீடு உள்ள பகுதி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளும் வகையில் விதி முறை உள்ளது).
திருமணத்தன்று ஆணுக்கு வயது 21-ம் பெண்ணுக்கு வயது 18-ம் பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
திருமணம் நடந்ததற்கான ஆதாரமாக கீழ்கண்ட ஏதேனும் ஒன்றை இணைக்க வேண்டும்.
திருமண பத்திரிக்கை.
கோவில்/சர்ச்/பள்ளிவாசல் நிர்வாகம் வழங்கிய திருமணம் நடந்ததாக கொடுக்கும் ஆவணம்.
திருமணம் நடந்ததிற்கான வேறு ஆதாரங்கள் (நோட்டரி அபிடிவிட், போன்ற ஆவணங்கள்)
முகவரிக்கான ஆதாரமாக கீழ்க்கண்ட ஒன்றில் ஏதேனும் ஒன்று கொடுக்கப்படவேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டை
குடும்ப அட்டை
ஓட்டுனர் உரிமம்
பாஸ்போர்ட் அல்லது விசா
வயதுக்கான சான்றாக கீழ் கண்ட ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
பிறப்புச் சான்று:
பள்ளி – கல்லூரிச் சான்று
பாஸ்போர்ட்/விசா
மூன்று சாட்சிகள் கையெழுத்திட வேண்டும். சாட்சிகள் ஏதேனும் ஒரு அடையாள அட்டை காண்பிக்க வேண்டும்.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கணவன் -4, மனைவி 4 போட்டோக்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.
தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம்-2009-ன் படி பதிவு செய்யத் தனியாக விண்ணப்ப படிவம் உள்ளது. http://www.tnreginet.net/english/forms.asp என்ற இணைப்பிலிருந்து 4 பக்க விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
திருமணத்தை பதிவு செய்ய புரோக்கர்கள் ரூ5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வாங்கிக் கொள்கிறார்கள். ரூ.100/- மட்டும் செலுத்தி திருமணத்தை பதிவு செய்யுங்கள்....
பட்டாவுக்குள் புதைந்து கிடக்கும் விஷயங்கள்:
சொத்து வாங்குபவர்கள் பலரும் பத்திரப்பதிவு செய்வதற்கு முழுமூச்சுடன் செயல்படுவதை போல பட்டா பெயர் மாற்ற விஷயத்தில் இருப்பதில்லை. வாங்கிய சொத்தின் மீது நாம் உரிமை கொண்டாட தாய்பத்திரத்திற்கு இருக்கும் மதிப்பு பட்டாவுக்கும் இருக்கிறது. பட்டாவுக்கும் விண்ணப்பித்து அதை வாங்கினால் மட்டுமே சொத்து வாங்கிய நடைமுறை விஷயங்கள் முடிவுக்கு வரும்.
பட்டா பெயர் மாற்றம்
விவசாய நிலம், வீடுகள், வீட்டுமனைகள், கட்டிடங்கள் போன்றவற்றை வாங்கும்போது அவற்றின் உரிமையாளர் பெயரை முறைப்படி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு பட்டா மாறுதல் என்று பெயர். ஏனெனில் நீங்கள் வாங்கிய சொத்துக்கு உரிமையாளராக இருப்பவர் பெயர் பட்டாவில் அப்படியே இருக்கும். பத்திரப்பதிவு செய்யும்போது உங்கள் பெயருக்கு சொத்தை மாற்றினாலும் பட்டாவுக்கும் விண்ணப்பித்து உங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும்.
அப்படி பட்டா பெற்றால் மட்டுமே அது உங்கள் சொத்து என்பது முழுமையாகும். ஏனென்றால் பட்டாவுக்கு விண்ணப்பிக்காமல் இருந்துவிட்டால் நீங்கள் வாங்கிய சொத்து பழைய உரிமையாளர் பெயரிலேயே தொடர்ந்து பட்டா இருக்கும் என்பதால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். முக்கியமாக நீண்டநாட்களாக பட்டா பெறாமல் இருந்தால் அவர் அந்த பட்டா மூலம் நீங்கள் வாங்கிய சொத்துக்கு உரிமை கொண்டாட நேரிடலாம். நீங்கள் சொத்தின் உரிமையாளரிடம் இருந்து சொத்தின் ஒருபகுதியை மட்டும் வாங்கி இருந்தால் அவர் வேறொருவருக்கு சொத்தை விற்பனை செய்யும்போது அதன் மூலம் உங்களுக்கு பிரச்சினை வரலாம்.
உரிமை கொண்டாடும் நிலை:
அதாவது நீங்கள் பட்டா பெறாமல் இருப்பதால் தன்னுடைய பட்டாவை சொத்து வாங்கும் மற்றவரிடம் காண்பித்து முழு சொத்தும் தனக்குரியது என்று சொல்லலாம். ஆகையால் சொத்து வாங்கியதும் பட்டாவுக்கு விண்ணப்பித்து விடுவது நல்லது. அத்துடன் நீங்கள் வாங்கிய சொத்துக்குரிய வரியை தொடர்ந்து செலுத்தி வருகிறீர்களா? என்பதை உறுதி செய்து கொள்வதும் அவசியம். பழைய உரிமையாளர் உங்கள் சொத்துக்கு தீர்வை செலுத்தி வந்தால், அதன் மூலம் கூட சொத்துக்கு சொந்தம் கொண்டாடும் நிலை ஏற்பட்டு விடலாம்.
அதாவது அடங்கல் அவர் பெயரில் இருந்தாலே அவர்தான் அந்த சொத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது உறுதியாகி விடும். அப்படியிருக்கும்போது நாம் வேறொருவருக்கு சொத்தை விற்பனை செய்யும்போது பிரச்சினை ஏற்படும். எனவே பட்டா உங்கள் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறதா? நீங்கள்தான் அதற்குரிய வரியை செலுத்தி வருகிறீர்களா? என்பதை உறுதி செய்து கொள்வது முக்கியம். மேலும் பட்டா பெயர் மாற்றம் செய்யாவிட்டால் வருவாய் துறையின் ஆவணங்களின் படி நீங்கள் சொத்துக்கு உரிமை கொண்டாட முடியாது.
சரிபார்ப்பது அவசியம்:
பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்தான் உரிமையாளர் என்ற நிலை ஏற்பட்டுவிடும். ஒருவேளை அரசாங்கம் உங்கள் நிலத்தை கையகப்படுத்தினால், அதற்கான இழப்பீட்டுத் தொகை பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவருக்குத்தான் வழங்கும் நிலையும் உருவாகும்.
போலி பட்டா தயாரித்து அதன் மூலம் நிலமோசடி செய்வதும் நடக்கிறது. அதனால் பட்டா நீங்கள் வாங்கி இருந்தாலும் அது தொடர்ந்து உங்கள் பெயரில்தான் இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்வதும் அவசியம். அதற்கு அதிக சிரமம் எடுக்க தேவையில்லை.
இணையதளம் மூலம் உங்கள் சொத்து விவரங்களை அடிக்கடி சரிபார்த்து வருவது நல்லது. அரசின் பிரத்தியேக இணையதளங் கள் அதற்கு வழிகாட்டுகின்றன. சொத்து பற்றிய சில விவரங்களை குறிப்பிட்டால் போதும். சொத்தின் தற்போதைய நிலவரங்களை தெரிந்து கொள்ள முடியும். அதில் ஏதாவது மாற்றல் இருந்தால் உடனே நடவடிக்கை எடுத்து சொத்து உங்களுடை யதுதான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
காலதாமதத்தால் ஏற்படும் பிரச்சினை:
அத்துடன் சொத்து வாங்கிய உடனேயே பட்டாவுக்கு பெயர் மாற்றம் செய்ய காலதாமதம் செய்வதன் மூலம் இன்னொரு பிரச்சினையையும் சந்திக்க வேண்டிவரும். சொத்தை உங்களுக்கு விற்பனை செய்தவர் இறந்து விட்டால் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவதற்கு தேவையில்லாத அலைச் சலையும், சிரமத்தையும் சந்திக்க வேண்டிவரும். இறந்தவருடைய இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ்கள் தேவைப்படும்.
அதற்கு நீங்கள் அவருடைய வாரிசுகளை நாடவேண்டி இருக்கும். அந்த சமயத்தில் வாரிசுகள் ஏதேனும் ஆட்சேபம் தெரிவித்தால் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவது மேலும் தாமதமாகக்கூடும். எனவே பத்திரப்பதிவு செய்தவுடனேயே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்து அதை வாங்கிவிடுவது நல்லது.
 

Legal - சட்டம் -2

விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் என்னென்ன ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டும் ?
முதலில் எந்த நீதிமன்றத்தில் வழக்குப்போடப் போகிறீர்கள் எனபதை தீர்மானிக்க வேண்டும். திருமணமான இடம் அல்லது கணவன் மனைவி வாழ்ந்த இடமாக இருக்கலாம். இந்து திருமணச் சட்டம், இந்திய விவாகரத்துச் சட்டம், சிறப்பு திருமணச் சட்டம், இஸ்லாமிய திருமண முறிவுச் சட்டம் ஆகியவற்றின்கீழ் பதிவுசெய்ய, என்ன காரணத்தின் பேரில் விவாகரத்து பதிவு செய்கிறோம் என்பதைப் பொறுத்து ஆவணங்கள் எவை என்பதைக் கூறலாம். ஆனால், பொதுவாக எந்தத் திருமணச் சட்டமாயினும் விவாகரத்துப் பதிவு செய்ய திருமணப் பத்திரிக்கை அல்லது திருமணப் பதிவுச் சான்றிதழ், முகவரிக்கான ஆதாரம், விவாகரத்துக்கான காரணங்களை எழுதி தட்டச்சு செய்த மனு ஆகிய ஆவணங்கள் அடிப்படையானவை. இதுதவிர, வழக்கறிஞர் மூலம் கொடுத்த நோட்டீஸ், அதற்கான பதிலறிக்கை, காவல்நிலை புகார், புகார் மனு ரசீது, முதல் தகவலறிக்கை, விவாகரத்து மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்களுக்கு உறுதுணையாக வேறு ஆவணங்கள் எதுவாயினும் தாக்கல் செய்யலாம்.

வாரிசுச் சான்றிதழ்..!
வங்கி வைப்புநிதி, பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட்போன்றவற்றில் முதலீடு செய் திருந்து எதிர்பாராமல் இறக் கும் பட்சத்தில் நாமினிகளிட த்தில் இந்த சொத்துக்கள் ஒப் படைக்கப்படும். ஆனால், நாமி னி இல்லாதபட்சத்திலோ அல் லது நாமினி மீது வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கும்ப ட்சத்திலோ வாரிசுச் சான்றித ழ் அடிப்படையில் அந்த சொத்துக்களை பெறலாம். ஆனால், ஒன் றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் நீதி மன்றம் வழங்கும் இறங்குரிமை சா ன்றிதழ் அடிப்படையில்
சொ த்துக்கள் ஒப்படைக்கப்படும்.
பொதுவாக, சொத்து பாகம் பிரிக்கும்போது குடும்பத்தின் அனை த்து வாரிசுகளிடமும் சம்மதம் பெறவேண்டும். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு பிரிக்க ப்படும் பாகப்பிரிவினை செல்லாது. நீதிமன்றத்தில் இதை மறைத் து தீர்வு பெறப்பட்டிருந்தால், பின்னாட்களில் இது தெரிய வரும் போது அந்த தீர்வு ரத்து செய்ய ப்படும்.
முதல் மனைவி உயிருடன் இரு க்கும்போது இரண்டாவது திரும ணத்தை இந்து திருமணச் சட்டம் அங்கீகரிக்க வில்லை. இதனா ல் இரண்டாவது மனைவிக்கு கண வனது சொத்தில் உரிமையில் லை. ஆனால், அவர் வசமிருக்கும்தனிப்பட்ட சொத்தில் உரிமை கோரமுடியும்”
பொதுவாக, சொத்து பாகப் பிரி வினையில் இதுபோன்று பல அடிப்படை விஷயங்களை கவ னித்தாலே சிக்கலில்லாமல் உறவுகளை கையாள முடியும். வழக்கு நீதிமன்றம் என இழுத் தடிப்புகள் இல்லாமல் சொத்துக்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

பெண்களுக்கான சொத்துரிமை!
பெற்றோர்கள் வழிவரும் பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரி மை உள்ளது. ஒருவேளை பெண் வாரிசுகள் தங்களுக்கு சொத்தி ல் பங்கு தேவையில்லை என்கிறபட்சத்தில், அதை இதர வாரிசுகள் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், திரு மணமான பெண்களுக்கான சொத்துஉரிமையி ல் சில கட்டுப்பாடுகள் உள்ளன.

2005-ம்ஆண்டு சட்டதிருத்தத்தி ன்படி, பெண்கள் தனது தந்தை ன் காலத்திற்குப் பிறகு அவரது பூர்வீகச் சொத்தில் உரிமை கோ ரமுடியும். மேலும், 25.3.1989-க் குமுன்பு திருமணம்செய்து கொ ண்ட ஓர் இந்துப் பெண் பூர்வீகச் சொத்தில் உரிமை கோர முடியாது. ஆனால், அதற்குபிறகு திரு மணம் செய்துகொ ண்ட பெண் தனது தந்தையின் பூர்வீகச் சொத் தில் உரிமை கோர முடியும். அதேவேளையில், சொத்து 25.3.89-க்கு முன்னர் பாகப் பிரிவினை செய்யப்பட்டிருந்தால், பாகப்பி ரிவினை கோர முடியாது. ஒரு வேளை அந்த சொத்து விற்கப் படாமல் அல்லது பாகம் பிரிக் கப்படாமல் இருந் தால் உரிமை கோர முடியும்.  
தமிழ்நாடு வருவாய் வசூல் சட்டம் 1864-இல் கீழ் எடுக்கப்பட வேண்டிய நடைமுறைகள்:
நிலவரியானது நான்கு தவணைகளில் ஜனவரி மாதம் முதல் செலுத்தப்பட வேண்டும். இதற்கு கிஸ்தி மாதங்கள் என்பார்கள். பிரதி மாதம் 10-ஆம் தேதிக்குள் செலுத்தப்படாவிட்டால், அதனை ஒரு நிலுவையாகக் கருத வேண்டும். அவ்வாறாக நிலுவை என்று கருதப்படும் பாக்கி வசூல் செய்ய நிலவரி வசூல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
மேலும் நிலவரியுடன் வாரகம், நகர்ப்புற நிலவரி குத்தகை வரிகள், நில மதிப்பு, மேம்பாட்டு வரி சர்வே பாக்கிகள். வறியர் வழக்கு பாக்கி ஆகியவைகளையும் நிலவரி வசூல் சட்டத்தின் கீழ் வசூல் செய்யலாம்.
நிலவரி மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட பாக்கிகளை தவிர அரசுக்கு செலுத்த வேண்டிய இதர பாக்கிகளை நிலவரி வசூல் திட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து வசூல் செய்யலாம்(சட்டப்பிரிவு 52).
இந்த பாக்கிகள் அரசுக்கு சேர வேண்டியதாக இருக்க வேண்டும்.
எதற்காக செலுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டினை நிரூபிக்க வேண்டும். அதில் ஏதாவது சிக்கல்கள்(Dispute) இருந்தால் சட்டப்பிரிவு 52-இன் படி வசூல் செய்ய உட்பட்டதன்று.
வருவாய் வசூல் சட்டப் பிரிவு 32 மற்றும் 33-இல் கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு சில நேர்வுகளில் ஒப்பந்தப் பத்திரம், பிணைப் பத்திரங்களின் நிபந்தனைகளின்படி வசூல் செய்ய வேண்டியதாயிருப்பின் அந்த ஷரத்துகளின் அடிப்படையில் பாக்கிகளை வசூல் செய்யலாம்.(வருவாய் நிலை ஆணை எண் 41)  

பொது ஊழியர் குற்றவாளியை தப்பிக்க உதவி செய்ந்தால்
இ.த.ச 130
யாராவது, சட்டப்படி சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒரு உள் நாட்டுக் குற்றவாளி அல்லது போர் குற்றவாளியை தப்ப வைக்க உதவி செய்தல் அல்லது மீட்டல் அல்லது தப்பி வந்த கைதிக்கு அடைக்கலம் கொடுத்தல் அல்லது தப்பிய ஒடிய குற்றவாளியை கைது செய்ய வரும் போது தடுத்தல் அல்லது தடுப்பதற்கு முயற்சி செய்தல் போன்ற எந்த குற்றத்தை செய்ந்தாலும் குற்றமாகும்.

இத்தகைய குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை குறையாத சிறைக்காவல் தண்டனை அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.

தவறான எடைக் கற்களை வைத்திருந்தால்
இ.த.ச 266.
யாராவது, தம்மிடம் தவறான எடை அல்லது நீளம் அல்லது முகத்தல் ஆகியவற்றைக் அளக்கப்பயன் படும் கருவிகளை தவறானவை என தெரிந்தப்பின்பும் மோசடியாக அவற்றைப் பயன்படுத்துவதும் அல்லது தம்மிடம் வைத்திருப்பதும் குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு ஒர் ஆண்டு வரை சிறைக்காவலும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
 இந்திய அரசியலமைப்புச் சட்டம்
1-4 இந்திய யூனியன் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.
பகுதி 2
5-11 இந்திய குடியுரிமை பற்றியது.
பகுதி 3
12-35 அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்
பகுதி 4
4A 36-51,51A(4A) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்., அடிப்படை கடமைகள்.
பகுதி 5
52-151 மத்திய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர், துணைக் குடியரசு தலைவர், நடுவண் அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அதன் அமைப்பு, உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் அமைப்பு.
பகுதி 6
152-237 மாநில அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.
பகுதி 7
238 அரசமைப்பு சட்டம் முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.
பகுதி 8
239-242 ஒன்றியப் பகுதிகள் குறித்து.
பகுதி 9,
9A 243,243 (P,Z,ZA,ZG) உள்ளாட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன, நகராட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பகுதி 10
244 பழங்குடியினர் பகுதிகள் குறித்து.
பகுதி 11
245-263 மத்திய மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.
பகுதி 13
301-307 இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடைமுறைக்கான உட்பிரிவுகள். பகுதி 14
14A 308-323,323A,323B அரசுப் பணிகள், மத்திய தீர்ப்பாயங்கள்.
பகுதி 15
324-329 தேர்தல்கள், தேர்தல் ஆணையம்.
பகுதி 16
330-342 ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து.
பகுதி 17
343-351 அலுவல் மொழி, வட்டார மொழி, நீதி மன்றங்களில் மொழி.
பகுதி 18
352-360 அவசர நிலைக்கானது (எமெர்ஜென்சி)
பகுதி 19
361-367 இதர (இதில் குடியரசு தலைவர், கவர்னர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)
பகுதி 20
368 இந்திய் அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.
பகுதி 21
369-392 தற்காலிக, இடைநிலை மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள்
பகுதி 22
392-395 குறுகிய தலைப்பு, ஆரம்பம் தேதி, இந்தி மற்றும் ரிப்பீல்ஸில் அதிகாரப்பூர்வ உரை.
இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள் அடிப்படை சிறப்புகள்
• உலகிலேயே நீண்ட அரசியலமைப்பு
• இறையாண்மை உடைய அரசியலமைப்பு
• எழுதப்பட்ட அரசியலமைப்பு
• குடியரசு அரசாங்கம், ஜனநாயக அரசாங்கம்
• ஒற்றைக்குடியுரிமை
• சமய சார்பின்மை தனியாக சட்டமியற்றும் அமைப்பு
• அடிப்படை கடமைகள் உண்டு
• தனியான நிருவாகம், சுதந்திரமான நீதித்துறை
• அடிப்படை உரிமைகல் உண்டு
• நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும்
• வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை உண்டு
• கூட்டாட்சி தத்துவம்தனி நபர் உரிமைகள்
• அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்
• நெகிழும் மற்றும் நெகிழா தன்மையுடையது
• சுதந்திரமான தேர்தல்,சட்டத்தின் ஆட்சி,நீதிமறு ஆய்வு,மத்திய மனில அரசுகளினைக்கட்டுப்படுத்தும் நீதித்துறை,,அரசியல் அமைப்பின்ச் கருனைத்தன்மை அட்டவணைகள் மற்றும் பாகங்கள் அரசியலமைப்பு உருவாகும் போது --395 ஷரத்துகள் மற்றும் 22 பாகங்கள் மற்றும் 8 அட்டவணைகள் இருந்தது. தற்போது சுமார் 444 ஷரத்துகள் 26 பாகங்கள் மற்றும் 12 அட்டவணைகள் உள்ளது.

குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 119 - ஒரு வழக்கின் சாட்சி பேச முடியாதவராயிருப்பின் அவர் நீதிமன்றத்தின் முன் எழுத்து மூலமாகவோ, சைகை மூலமாகவோ மற்றவருக்குப் புரியும் வண்ணம் கொடுக்கும் சாட்சியம் வாய்மொழி சாட்சியத்துக்கு ஒப்பாக ஏற்றுக் கொள்ளப்படும்.  
பார் கவுன்சில் ஆப் இந்தியா விதி 4 ன் கீழ் கோடை காலத்தில் கருப்பு கோட்டும் அணிய தேவையில்லை.
CHAPTER-IV
FORM OF DRESSES OR ROBES TO BE WORN BY ADVOCATES
(Rules under Section 49 (I) (gg) of the Act)
Advocates appearing in the Supreme Court, High Courts, Subordinate Courts, Tribunals or Authorities shall wear the following as part of their dress which shall be sober and dignified.
1. ADVOCATES
(a) A black buttoned up coat, chapkan, achkan, black sherwani and white bands with Advocates’ Gowns.
(b) A black open breast coat. white shirt, white collar, stiff or soft, and white bands with Advocates’ Gowns.
In either cases wear long trousers (white, black striped or grey), Dhoti excluding Jeans.
Provided further that in Courts other than the Supreme Court, High Courts, District Courts, Sessions Courts or City Civil Courts, a black tie may be worn instead of bands.
II. LADY ADVOCATES
(a) A black full sleeve jacket or blouse, white collar stiff or soft, with white bands and Advocates’ Gowns.
White blouse, with or without collar, with white bands and with a black open breasted coat.
Or
(b) Sarees or long skirts (white or black or any mellow or subdued colour without any print or design) or flare (white, black or black striped or grey) or Punjabi dress churidar-kurta or salawar-kurta with or without dupatta (white or black) or traditional dress with black coat and bands..
III. Wearing of Advocates’ gowns shall be optional except when appearing in
the Supreme Court or in High Court.
IV.. Except in Supreme Court and High Courts during summer wearing of black
Coat is not mandatory.   

CONTACT FORM

Your subjects or queries please post here; I have take care for you, and give your mail Id’s and cell phones no’s is compulsory.  

Address

R.No.35, 1st Foor,
Building No.75, Siruvallur Road, Perambur,
Chennai - 600011.
Near by perambur Bridge.

Contacts

Email:
info@advocatechennai.net
Phone: +44-48675764 
Cell No:9840242490

Links

Face book links: 
  suresh chennai 
Chennai advocates
Tamilnadu advocates
tamilzhansamuganalla